
சென்ற 2006-ஆம் வருடத்தில் டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியாகிய படம் “வேட்டையாடு விளையாடு”. இதில் ஜோதிகா, கமலானி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
இதில் ராகவன் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தை மீண்டும் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்கின்றனர். அதாவது, வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என அறிவித்து டி.சி.பி. ராகவன் இஸ் பேக் என புதிய போஸ்டரை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.