தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட சொத்து விவர பட்டியலில் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்திற்கு ரூ.931.83 கோடி சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரியின் பெயரில் 895.47 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன எனவும், சந்திரபாபு நாயுடுவின் பயத்தில் 36.35 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாகவும் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.