
திமுக கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், செயல்திட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுக்கு தான் வெற்றி என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பயனடைந்தவர்களின் பாராட்டும் பயனாளிகளின் மனநிறைவும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவை மீண்டும் ஆட்சி அமைக்க செய்யும் என்று உயர்நிலை செயல்திட்ட குழுவில் தீர்மானம்.