கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டோம் என்று நினைப்பதற்கு முன்பே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அனைவரையும் தற்போது கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. EG5 இன் புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாக கூறப்படுகின்றது. இது ஏற்கனவே உலக அளவில் 51 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த மாறுபாடு ஒமிக்கிரான் மற்றும் பிற மாறுபாடுகளில் இருந்து புதிய உருமாற்றம் அடைந்துள்ளதாகவும் மருத்துவ சோதனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம் என்றும் உலக நாடுகளை சுகாதார அமைப்பை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருந்தாலும் இந்த மாறுபாடு மற்ற கொரோனா வகைகளை விட குறைவாகவே பரவுவதாகவும் இருந்தாலும் சுகாதாரம் பேணுதல் அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது