தமிழக பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ள நடிகை நமீதாவிடம் பெண்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள் என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தவர் நடிகை நமீதா. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக வேட்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து இவருக்கு தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பல்வேறு போட்டிகளை நமிதா தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது நிருபர் ஒருவர் பெண்களுக்காக மத்திய பாஜக அரசு பல திட்டங்களை செய்து வருகிறது என்று சொன்னீர்கள். பாஜக செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் பெண்களுடைய வளர்ச்சிக்கு இதுவரை என்ன செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், என் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்க்க பெண்களை தான் வைத்திருக்கிறேன். அவர்களிக் ரெண்டு பெண்களுக்கு 22, 23 வயது ஆகிறது. எனவே அவர்கள் விரைவில் திருமணம் செய்வார்கள் . அந்த திருமணத்தை நான் தான் நடததி வைக்கப் போகிறேன். இப்படி என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.