
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த விவகாரம் முடியாத நிலையில் மேலும் ஒரு மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தாராபுரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வந்தார். கடந்து ஒன்றாம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மாணவி தனது தோழிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காக மருத்துவமனை வளாகத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மகப்பேறு வார்டு வளாகத்தில் உள்ளே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முகமது ஆதம் என்பவரை கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஆதம் போதையில் மாணவியிடம் அத்துமீறி உள்ளார். இது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.