ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்தது. இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்நிலையில் இவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் தொடுத்துள்ள மனுவில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றதை பணப்பட்டுவாடா, விதிகளை மீறி பிரசாரம் உள்ளிட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரம் ஆரம்பமாகியுள்ளது.