தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு சாதகமான சில விளக்கங்களை கொடுத்துள்ளது.

இதையடுத்து 12 மணிநேர வேலை சட்ட மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் ஏப்.24ம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை ஆணையர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.