தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்கள் கழித்து திரையரங்கில் வெளியான படம் மதகஜராஜா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது.

இதற்கு முன்பும் சுந்தர் சி – விஷால் கூட்டணியில் வெளியான ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்நிலையில் விஷால் சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது.

சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்கயிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இவர்களது கூட்டணியில் அடுத்த படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.