மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜியின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் சாவா. இந்த படத்தில் சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கெளஷல் அதேபோன்று சாம்பாஜியின் மனைவியான யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ட்ரைலரில் பாரம்பரிய இசை கருவியான லெஸிம் உடன் சத்ரபதி சாம்பாஜி மற்றும் அவரது மனைவி நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு மகராஷ்டிரா அமைச்சர் உதைய் சமந்த் எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் படத்தின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கு வரலாற்று ஆய்வாளர்களுக்கு முழு படத்தையும் போட்டுக் காட்ட வேண்டும். அதன் பிறகு தான் படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகள் நீக்கப்படும் என்று பட குழு உறுதி அளித்துள்ளது.