
தமிழகத்தில் சமீப காலமாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் லேசானது முதல் கன மழை பெய்து வரும் நிலையில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மலை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வகையில் இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.