தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில் தனபால் என்ற 40 வயது நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தற்காலிக ஆசிரியராக சேர்ந்தார். அந்த சமயத்தில் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு 10-ம் வகுப்பு மாணவியுடன் தனபாலுக்கு பழக்கம் ஏற்பட்டது. ‌

இது பள்ளியின் தலைமைக்கு தெரிய வந்ததால் அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இருப்பினும் அந்த மாணவியிடம் அவர் தொடர்ந்து பழகி வந்துள்ளார். அவர் அந்த மாணவியகடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனபாலை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.