
சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியார் குறிச்சியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் குமரேசன்(36). கடந்த 2016-ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் குமரேசனுக்கு 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் நட்பாக பேசி நெருக்கமானார்கள்.
குமரேசன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதனையடுத்து குமரேசன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த விழுப்புரம் மகிளா நீதிமன்றம் குமரேசனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.