
திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்ட பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, அரசியல் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக எளிதில் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில் மும்மொழிப் கொள்கைக்கு எதிராக பாஜகவின் கையெழுத்து இயக்கம் குறித்து துணை முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, முதலில் பள்ளி குழந்தைகளிடம் கையெழுத்தை வாங்க கூடாது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களை தவிர்த்து ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கினோம். ஏற்கனவே பாஜகவினர் மிஸ்டு கால் கொடுத்து ஒரு கோடி பேரை கட்சியில் சேர்த்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே இதனை பார்க்கிறோம் என கூறியுள்ளார் .