உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் நிகோஹா (Nigoha) காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், தெரு நாய் ஒன்றை வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமாக அடித்துக் கொலை செய்து, அதன் தோலை உரித்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்த தெரு நாய் ஒன்றை முதலில் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார், பின்னர் ஒரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து அந்த வாயில்லா ஜீவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இத்துடன் நிறுத்தாமல், செத்துக் கிடந்த அந்த நாயின் அருகில் அமர்ந்து அதன் தோலை அவர் உரித்த கொடூரக் காட்சிகள் அங்கிருந்த சிலரால் கேமராவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி நெட்டிசன்களிடையே மாபெரும் ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
🚨 लखनऊ के निगोहा में कुत्ते की गला रेतकर हत्या व चमड़ी उतारने का वीडियो वायरल।
समाज सेविका चारु खरे (Aasra The Helping Hands Trust) ने शिकायत दर्ज कराई।
NGO की request पर SO अनुज कुमार तिवारी ने आरोपी बल्लू पुत्र गौरी शंकर को मानसिक स्वास्थ्य परीक्षण हेतु भेजना सुनिश्चित किया।… pic.twitter.com/3yXTQSvoAW
— Aasra the helping hands (@charukhare99) May 27, 2026
இந்தக் கொடூரமான வீடியோவை பார்த்துப் பதறிப்போன அந்தப் பகுதி கிராம மக்கள், உடனடியாக நிகோஹா காவல் நிலையத்திற்குத் திரண்டு சென்று, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஆசாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அதிரடிப் புகார் அளித்தனர்.
இந்த மாதிரியான கொடூரமான வக்கிர புத்தி கொண்டவர்கள் சமூகத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இவன் மீது இப்போது கடுமையான ஆக்ஷன் எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கே ஆபத்தாக மாறுவான் என்றும் கிராம மக்கள் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, ‘ஆஸ்ரா தி ஹெல்பிங் ஹேண்ட்ஸ் ட்ரஸ்ட்’ (Aasra Trust) என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சாரு காரே, காவல் அதிகாரி அனு குமாரை நேரில் சந்தித்து அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இந்த மெகா விவகாரத்தை கையில் எடுத்த காவல் அதிகாரி, அந்த ஆசாமியின் அநாகரிகச் செயல்களைக் கவனித்து, அவனுக்கு மனநிலை ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உடனடியாக அவனை ‘மனநல மருத்துவப் பரிசோதனைக்கு’ (Mental Evaluation Test) அனுப்ப அதிரடியாக முடிவு செய்துள்ளார்.
