இந்திய ரயில்வேயின் தூய்மைப் பணியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த நிலையம், தற்போது இந்தியாவின் தூய்மையான ரயில் நிலையங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளோ அல்லது சிகரெட் துண்டுகளோ இன்றி, ஒரு சிறு குப்பை கூட தென்படாத வகையில் இந்த நிலையம் பராமரிக்கப்படுவது பயணிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீனக் கட்டமைப்பு மட்டுமின்றி, தூய்மையை ஒரு கலாச்சாரமாகவே இந்த நிலையம் கடைபிடித்து வருவது இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mubeena ch (@mubeena_ch_)

“>

செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த நிலையத்தின் தூய்மை கண்காணிக்கப்படுகிறது. குப்பைத் தொட்டிகள் நிறைந்தவுடன் தானாகவே தகவல் தெரிவிக்கும் வசதி முதல், தரைத்தளத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்கச் செய்யும் நவீன இயந்திரங்கள் வரை இங்கே பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், பயணிகள் குப்பைகளைத் தரையில் வீசாமல் இருக்க விழிப்புணர்வு வாசகங்களும், முறையான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன. “ரயில் நிலையம் என்றாலே அசுத்தம்” என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு விமான நிலையத்திற்கு இணையான தூய்மையையும் பொலிவையும் இந்த ராணி கமலாபதி ரயில் நிலையம் வழங்குகிறது.