தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 97.98 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அது தொடர்பாக ஆய்வு செய்வதில் குளறுபடிகள் நடந்திருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உரிமையாளர்,குத்தகைதாரர் மற்றும் இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்கு தெரியாமலேயே மின் இணைப்பு என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிக அளவில் மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள், களப்பணியாளர்களுக்கு மிகக் கடுமையான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்புடன் இணைக்கப்பட்டதை உறுதி செய்ய அறிவுறுத்த வேண்டும் எனவும் உயர் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி பணி குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தமிழக மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.