அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி சென்ற 2018 ஆம் வருடம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தன் நீக்கத்தை எதிர்த்து 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யாமல் 3 வருடங்களுக்கு பின் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்தது.