மக்களவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட போது மின்சார வாகன பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டார். வரும் காலங்களில் பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக குறையும். 25 அரிய கனிமங்களுக்கு மத்திய அரசு முற்றிலும் வரிவிலக்கு அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மத்திய அரசின் மின்சார இயக்க ஊக்குவிப்பு திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட மானிய தொகை கூடுதலாக 278 கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய், சிறிய மின்சாரம் மூன்று சக்கர வாகனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், மூன்று சக்கர கனரக வாகனங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அதர், பஜாஜ், ஓலா உள்ளிட்ட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.