தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் (TNGEDC) சமீபத்தில் வழங்கப்பட்ட டெண்டர் ஒதுக்கீடுகளில், விதிகளுக்குப் புறம்பாகப் பயங்கர அவசர கதியில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த அதிரடி சோதனையின் போது, கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில், எந்தவொரு முறையான சரிபார்ப்பும் இன்றி ஃபைல்கள் அவசர அவசரமாக பாஸ் செய்யப்பட்டுள்ளது கச்சிதமாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அமைச்சரின் இந்த அதிரடி விசாரணையில், முறைகேடுகளுக்குத் துணையாக இருந்த தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் (CFC) காசி மற்றும் தலைமைப் பொறியாளர் (CE) சந்திரசேகரன் ஆகிய இரு உயர் அதிகாரிகளையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி ஆக்ஷன், லஞ்சப் புள்ளிகளை அதிர வைத்திருப்பதுடன், ஒட்டுமொத்த அரசு அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
