மிதுனம் ராசி அன்பர்களே,

இன்று செல்வ செழிப்பான சூழல் உருவாகும். இன்று மாற்றங்கள் ஏற்படும். நல்ல விஷயங்கள் மூலம் நல்லதே நடக்கும். புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறரை அதிகாரம் செய்யும் பணிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்காக அலைந்து திரிந்து சில பணிகளை முடிக்க வேண்டியது இருக்கும். உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்க்கவும். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கொடுத்த வாக்கை இன்று எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அனுகூலமாக கிடைக்கும். பெண்களுக்கு இன்று யோகமான நாளாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும். உயர் கல்வியில் சாதிக்க முடியும். முயற்சி செய்தால் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பிங்க் நிறம்