சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் வகை காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அரசுத் துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மக்கள் அதிகமாக கூடும் பரபரப்பான பகுதிகளில், மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவத்துறையினரின் பரிந்துரையின்படி, முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு தவிர்க்க முடியாவிட்டால், முறையான பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும், காய்ச்சல், சளி, தும்மல், தழும்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும், தனிநபர் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும், சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.