தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு இணைய சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைப் பெற விருப்பமுள்ள மாற்று திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகாமை மூலமாக நடத்தப்படும் இ சேவை மையங்கள் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதள முகவரி மூலமாக அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது