தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் இது குறித்த வழிகாட்டுதல்கள் குறித்தும் யாருக்கெல்லாம் இந்த உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்தும் யாருக்கெல்லாம் தகுதி இல்லை என்பது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் உரிமைத்தொகை வழங்குவது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். அதன்படி மாநில முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 50 குடும்ப அட்டைதாரர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார்.