மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், சாதி சான்றிதழ் உள்ளிட்ட 134க்கும் மேற்பட்ட சேவைகளை பெற்று மக்கள்  பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் 5 நலத்திட்ட உதவிகளை பெற மாற்றுத் திறனாளிகள் இனி இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற இனி இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், www.tnesevai.tn.gov.in/citizen/registration.aspx என்ற தளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.