தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு இனி நான்கு கிராம் தங்கத் தாலி வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களில் திருமணம் செய்யும் மாற்று திறனாளிகளுக்கு இந்த நான்கு கிராம் தங்கம் வழங்கப்படும் என்பது இந்த திட்டத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது.