தமிழகத்தில் அரசு பேருந்துகளை அதிக அளவாக ஏழு ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15 ஆண்டுகளைக் கடந்த அரசு பேருந்துகளும் பிற உறுதிகொளும் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன.

அது மட்டுமல்லாமல் பயணிப்பவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்போனுக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றைக் கருதி 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.