சீன நாட்டில் கோவா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனால் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தற்போது புகார் கொடுத்துள்ளார். அதில் என்னுடைய தனி உரிமையை மீறி மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்வதை வீடியோவாக பதிவிட்டுள்ளனர். நிச்சயம் அந்த வீடியோவை அதுவும் ஆப்ரேஷன் தியேட்டரில் வைத்து எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக மருத்துவமனையில் உள்ளவர்கள் தான் எடுத்திருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு எனக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளோடு ஹாஸ்பிடலில் 3 மாதங்களுக்கு மேல் உள்ள சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் எனவே அந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என்பதை கண்டுபிடிக்க இயலாது என்றும் கூறிவிட்டனர். அதோடு மருத்துவமனை நிர்வாகம் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கவில்லை என்று கூறியதோடு அதனை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்வதாக கூறியுள்ளனர்.

ஆனால் இதற்கு கோவா மறுப்பு தெரிவித்துவிட்டார். இருப்பினும் கோவா மருத்துவமனையில் உள்ளவர்களை தவிர யாரும் இந்த வேலையை செய்திருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியதால் இறுதியில் மருத்துவமனை நிர்வாகம் வீடியோ எடுத்தவர் தற்போது வேலையை விட்டு நின்று விட்டதாகவும் அவரின் தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் ஒப்புக்கொண்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கோவா தனக்கு நீதி வேண்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.