பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பாமக-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலர் ‘மாம்பழம்’ சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும், அந்தச் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சின்னத்தை முடக்குவது தொடர்பாகப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ராமதாஸின் மனுக்களைத் தள்ளுபடி செய்தனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் சின்னம் தொடர்பாகத் தொடரப்பட்ட இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது பாமக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், சின்னத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் இருந்த சட்டப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
