திமுக செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்ற நிலையில், அங்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மூத்த நிர்வாகிகளிடமும் எம்எல்ஏக்களிடமும் மிகவும் காட்டமாகப் பேசியதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

​கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “சட்டமன்றத்திற்குள் மற்ற கட்சியினருடன் மாமா, மச்சான் என உறவு கொண்டாடவா சென்றுள்ளீர்கள்? மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைப்பதில் இன்னும் கூடுதல் வீரியமும் தீவிரமும் தேவை. அதை விடுத்துவிட்டுச் மன்றத்திற்குள் தேவையில்லாமல் சமரசம் செய்து கொள்ளக் கூடாது” என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

​குறிப்பாக, எ.வ.வேலு உள்ளிட்ட முன்னணி எம்எல்ஏக்களைச் சுட்டிக்காட்டி அவர் இந்த டோஸை விட்டதாகக் கூறப்படுகிறது. மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் திமுகவின் குரல் இன்னும் அழுத்தமாக ஒலிக்க வேண்டும் என்பதையும், மாற்றுக்கட்சியினரின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தட்டிக்க கேட்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே இவ்வளவு காரசாரமாகப் பேசியுள்ள செய்தி, திமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியல் களத்திலும் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளது.