
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றமானது தெரிவித்தது. இந்த நிலையில் மாமன்னன் திரைப்படத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்த்திருக்கிறார். இதுகுறித்த புகைப்படத்தை மாரி செல்வராஜ் தன் சமூகவலைத்தளபக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதாவது “மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கட்டித் தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும், பிரியத்தையும் சமர்ப்பிக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த டுவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்
@Udhaystalin @arrahman @KeerthyOfficial @RedGiantMovies_ #MAAMANNAN
pic.twitter.com/1snE2uBQeF
— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023