நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா சோப்ரா. இதனையடுத்து ‘மருதமலை’, ‘லீ’ போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இப்போது, தமிழ்ப் படங்களைக் காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

40 வயதாகும் மீரா சோப்ரா, பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மீரா சோப்ரா தனக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. மார்ச் மாதம் ராஜஸ்தானில் நடக்கும் எனது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. மாப்பிள்ளை யார் என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.