திருமண வைபோகம் என்றாலே பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கும். அப்படி ஒரு திருமண விழாவில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. மாப்பிள்ளையை நடுவில் அமரச் செய்து சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு அவருக்கு குலோப்ஜாமுனை ஊட்டுகின்றனர்.

பார்ப்பதற்கு அது ஒரு விளையாட்டு போன்று தான் தெரிகிறது. ஒரு பெண் ஸ்பூனில் குலோப் ஜாமுனை எடுத்து ஊட்டிய போது புது மாப்பிள்ளை அமைதியாக தலையை குனிந்த படி இருக்கிறார். சுற்றி இருந்தவர்கள் மாப்பிள்ளை குலோப் ஜாமுனை சாப்பிடுவாரா மாட்டாரா என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நொடியில் மாப்பிள்ளையின் வேகம் சுற்றி இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆம், ஒரு நொடியில் குலோப்ஜாமுனை தன் வசப்படுத்தி இருந்தார். இதைப் பார்த்தவர்கள் கைத்தட்டி கொண்டாடினார். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் மாப்பிள்ளையின் வேகத்தை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C_QZQLGyvZ0/