
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே விலங்குகளின் வேட்டை என்பது பார்ப்பதற்கே சுவாரசியமாகவும் சில நேரங்களில் அச்சுறுத்தலாகவும் இருக்கும்.
அதிலும் குரங்குகளின் சேட்டை என்றால் சொல்லவே வேண்டாம். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குரங்கு ஒன்று மரத்தில் இருக்கும் நிலையில் மரத்தின் கீழே இரண்டு மான் நின்றுள்ளது. அதற்கு உணவாக உட்கொள்ள மரத்தின் இலை எட்டாமல் உள்ள நிலையில் அந்த குரங்கு அதனை சாமர்த்தியமாக கீழே இறக்கி உள்ளது. தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Monkey assisting deers to feed on tree leaves
— Tansu YEĞEN (@TansuYegen) September 1, 2023