நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருள்களுக்கும் காலாவதே தேதி என்பது கட்டாயம் இருக்கும். இவை நாம் சாப்பிடும் பொருட்களில் ஆரம்பித்து நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வரை அனைத்திலும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ் எப்படி வாங்க வேண்டும் எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் டூத் பிரஸ் சேதமாகும் வரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதனை குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை நீண்ட காலங்கள் வைத்து பயன்படுத்தினால் சரியாக சுத்தம் செய்யாது. பாக்டீரியாக்கள் அதிக அளவு வளர்ந்து பிரச்சனையை ஏற்படுத்தி விடவும். குறைந்த விலையில் கிடைக்கும் டூத் பிரஷ்சை வாங்கி சிரமப்படாமல் தரமானதாக பார்த்து வாங்க வேண்டும். இதில் இருக்கும் முட்கள் போன்ற பகுதி கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் கடினமாக இருந்தால் ஈறுகளில் ரத்தப்போக்கு மற்றும் அதிக வலியை ஏற்படுத்தி விடும்.