
இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுடைய எதிர்காலத்திற்காக சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு போஸ்ட் ஆபீசில் முதலீடு செய்யும்போது நல்ல லாபத்தை பெறலாம். குறைந்த முதலீட்டில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இதற்கு போஸ்ட் ஆபீசின் மாதாந்திர முதலீடு திட்டத்தில் இணையலாம். குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் ஏற்றவிதமான செயல் திட்டங்கள் உள்ளது. இதில் மிகப் பிரபலமான திட்டம் மாதாந்திர வருமான திட்டம். பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை பெற விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதில் கவர்ச்சிகரமான வட்டி மற்றும் அரசாங்க ஆதரவும் தபால் அலுவலக மாதாந்திர திட்டத்தில் உள்ளது. நிதி பாதுகாப்பு வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும், ஐந்து ஆண்டுகள் தனிப்பட்ட கணக்கில் அதிகபட்சம் ஒன்பது லட்சம் கூட்டுக்கணக்கில் 15 லட்சமும் மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெறலாம். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் மாதாந்திர வருமானமும் நிலையான வட்டி விகிதமும் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு தபால் அலுவலகம் தற்போது 7.4 சதவீதம் வட்டி வழங்குகிறது 5 லட்சம் முதலீட்டுக்கு 3083.33 மாதாந்திர வருமானமாக கிடைக்கும். ஒன்பது லட்சம் வைப்பு தொகைக்கு 550 மற்றும் 15 லட்சத்துக்கு 9250 தொகையாக மாதம் பெறலாம்.