எல் ஐ சி ஜீவன் பிரகதி திட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 200 செலுத்த வேண்டும். அதாவது மாதத்திற்கு 6000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் இந்த திட்டத்தில் செலுத்தினால் 20 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு போனஸ் உடன் 28 லட்சத்தை நீங்கள் பெறுவீர்கள். 12 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம் எனவும் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 1.5 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகைக்கு எந்த வரவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் முதலீடு செய்த காலத்துடன் அதன் ரிஸ்க் கவரும் அதிகரிக்கும் என்பதால் ரிஸ்க் கவர் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.