ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் தலா 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு ஒதுக்கும் உணவுப் பொருட்களை கூட்டுறவு விற்பனை நிலையம் மூலமாக விற்பனை செய்து விலையை கட்டுப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமீப காலமாக பருப்பு, மளிகை பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.