தமிழகம் முழுவதும் கலந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை குறைக்க தற்போது விற்கப்படும் விலையில் இருந்து 70 ரூபாய் குறைத்து கிலோவிற்கு 60 என்ற அடிப்படையில் ரேஷன் கடைகளில் அரசை விற்பனை செய்து வருகிறது.

குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக ரேஷன் கடைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதே சமயம் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று தக்காளி விற்பனை ரேஷன் கடைகளில் தொடங்கியுள்ளது.