புதுச்சேரியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பணியாற்றும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, இருசக்கர வாகனம் வாங்க 500 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மாணவர்களுக்கு காலணி மற்றும் புத்தகப் பை ஆகியவை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.