
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி ஆசிரியராக பொன்சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இவர் மாணவிகளை போட்டியில் கலந்து கொள்வதற்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு முதல் நாள் போட்டி நடைபெறாததால் மறுநாள் போட்டி நடைபெறும் என்று அறிவித்தனர். இதன் காரணமாக ஆசிரியர் மற்றும் மாணவிகள் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில் அங்கு மாணவிகளை அவர் மது குடிக்க வற்புறுத்தியதோடு ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் நேற்று அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் பொன் சிங்கை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது பள்ளியின் முதல்வர் ஸ்வீட்லி மற்றும் செயலாளர் செய்யது அகமது ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசசார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் தூத்துக்குடியில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.