தமிழகத்தில் காலாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 9 வரை 9 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நேற்றுடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளது. மேலும் மாணவர்கள் 9 நாட்கள் விடுமுறை கழித்து பள்ளிக்கு வரும் நிலையில் ‌ பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் இன்றைய தினமே திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களிடம் கொடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொடர் விடுமுறை மற்றும் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பவோர் ஆகியோரின் வசதிக்காக சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை இன்றே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு இரண்டாம் பருவ புத்தகங்களையும் இன்றைய தினம் மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்றல் மற்றும் கற்பித்தல் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது..