தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த பொது தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை நடைபெற்றது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ் டூ துணை தேர்வு முடிவுகள் ஜூலை 26 இன்று வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். மேலும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 30ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.