
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை சென்னை அருகே கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கபட்டிருந்த நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் இன்று வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் கடந்த இரு தினங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையில் மழை தணிந்து வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக இன்று வழக்கம் போல் அனைத்து பள்ளி கல்லூரிகளும் செயல்படும்.