
பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை Fail ஆக்க கூடாது என்ற கொள்கை இதுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் அந்த கொள்கையை தற்போது ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கூடாது.
தோல்வியடைந்த மாணவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அந்த தேர்விலும் தோல்வியடைந்தால் மீண்டும் அதே வகுப்பில் தான் படிக்க வேண்டும் அடுத்த வகுப்புக்கு செல்ல இயலாது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தொடக்க கல்வி முடியும் வரை மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்க கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
கேந்திரிய வித்யாலயா, நவோத்யாலா வித்யாலயா போன்ற பள்ளிகள் உட்பட மத்திய அரசால் செயல்படும் 3000 பள்ளிகளுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாநிலங்கள் இந்த விஷயத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.