ரூ.1,25,000 மத்திய அரசு சார்பில் இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், 2023 – 24 நிதியாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இதற்கு 9 மற்றும் +1 படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10க்குள் https;//yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ‘யாசவி’ நுழைவுத் தேர்வின் தகுதியின் அடிப்படையில் 9ம் வகுப்பு மானவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 75,000, +1 மாணவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 1,25,000 வழங்கப்படும்.