தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்களுக்கு மேம்படுத்திக் கொள்ளும் விதமாக 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒரு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதம் 1000 வழங்குவதற்கான திறனாய்வுத் தேர்வுக்கு ஆக.7 முதல் 18ம் தேதி வரை dge.tn.gon.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தலா 500, மாணவ, மாணவிகள் என மொத்தம் 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு, ஒரு கல்வியாண்டுக்கு மாதம் F1000 வீதம் மொத்தம் 10 மாதங்களுக்கு 710,000 உதவித் தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை பட்டப்படிப்பு வரை அரசு வழங்குகிறது.