தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி மாணவிகளுக்காக புதுமைப்பெண் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். என் நிலையில் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வு தொகை பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை திட்டம் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு இந்த தொகை வட்டியுடன் வழங்கப்படும். இந்நிலையில் இந்த முதிர்வு தொகையை பெறுவதற்கு பலரும் விண்ணப்பிக்காமல் உள்ள நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களிலும் மாதந்தோறும் இரண்டாம் செவ்வாய்க்கிழமைகளில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.0