இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் எதிர்காலத்திற்கு பாடங்கள் பயனளிக்கும் விதமாக கல்வி முறையில் தொடர்ந்து புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றது. தற்போது இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் மக்களவையில் உயர்கல்வி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர், தமிழகத்தை பொறுத்த வரை 27 மாவட்டங்கள் உயர்கல்வியில் பின்தங்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2008 ஆம் நிலவரப்படி அரியலூர், கோவை, திண்டுக்கல், கடலூர், ஈரோடு தர்மபுரி, காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது என கூறிஉள்ளார்.