பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தாக்குகிறது இதனை செயல்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யும் பொருட்டு அரசு பள்ளிகள் வழங்கப்படும் சத்துணவில் திணை வகைகளை சேர்க்க மகாராஷ்டிரா மாநில அரசு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது மாணவர்களுடைய ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்யும் விதமாக அக்ரோஜி ஆர்கானிக் என்ற புத்தாக்க நிறுவனமானது பள்ளி மாணவர்களுடைய சத்துணவில் தினை வகைகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி சிறுகுறு விவசாயிகள் மற்றும் பெண்களிடமிருந்து திணை வகைகளை பெற்று விற்பனை செய்து வருகிறது. இத்திட்டம் முதல்கட்டமாக மகாராஷ்டிராவில் புனேவில் தாலுகாவில் உள்ள ஏழு அரசு பள்ளிகளில் செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டம் குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு  வரும் நிலையில் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.